Gold-rate | gold Price today | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நிலவி வருவதால், இந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்த வாரத்தில் செவ்வாய்கிழமை அன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 அதிகரித்தது. மறுநாள் புதன்கிழமை சவரனுக்கு ரூ. 160 குறைந்தாலும், வியாழக்கிழமை அன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 அதிரடியாக அதிகரித்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று வெள்ளிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு சவரன் ரூ.45,640-க்கும், கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,705-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.520 அதிகரித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதனால் நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் விழிபிதுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.46,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.65 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,770 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500-க்கு விற்கப்படுகிறது.