Today’s Gold Silver Price | மீண்டும் தட்டித் தூக்கிய தங்கம் விலை... இல்லத்தரசிகள் சோகம்!

தங்கம் விலை இன்றும் அதிரடியாக அதிகரித்து வரலாற்றில் மீண்டும் முதல் முறையாக உச்சபட்ச விலையை எட்டியிருக்கிறது. இதனால், நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

தங்கம் விலை இன்றும் அதிரடியாக அதிகரித்து வரலாற்றில் மீண்டும் முதல் முறையாக உச்சபட்ச விலையை எட்டியிருக்கிறது. இதனால், நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
 Gold silver price today 12 April 2025 chennai in tamil

வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Gold Silver Price Today, 29 March 2024 | Gold Rate: இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது. 

Advertisment

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்தது. ஆனால், திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 அதிகரித்தது. இருப்பினும், செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்தது. ஆனால், மறுநாள் புதன்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 அதிகரித்தது. இதேபோல், நேற்று வியாழக்கிழமை சவரனுக்கு ரூ. 280 அதிகரித்து வரலாற்றில் முதல் முறையாக உச்சபட்ச விலையை எட்டியது. ஒரு சவரன் ரூ. 50, 000 -க்கும், கிராமுக்கு ரூ. 35 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 6,250-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இன்றைய தங்கம் விலை 

இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் அதிரடியாக அதிகரித்து வரலாற்றில் மீண்டும் முதல் முறையாக உச்சபட்ச விலையை எட்டியிருக்கிறது. இதனால், நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1120 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 51, 120 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.  கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,390-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

Advertisment
Advertisements

வெள்ளி விலை 

வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.80,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold Rate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: