/tamil-ie/media/media_files/uploads/2022/05/gold.jpg)
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு முதலே தங்கத்தின் விலை அதிகளவில் ஏற்றம் கண்டு வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி தங்கம் விலை சவரன் ரூ 70 ஆயிரத்தை தாண்டியது.
கடந்த ஏப்ரல் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக ஏப்ரல் 8ஆம் தேதி ரூ 65,800-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக கடந்த 22 ஆம் தேதி ரூ 74,320-க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.
ஏப்ரல் 30-ஆம் தேதி அட்சய திருதியை அன்று ஒரு கிராம் தங்கம் ரூ 8,980-க்கும் சவரன் ரூ 71,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மே 1 ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிந்து ஒரு சவரன் ரூ.70,200க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.205 சரிந்து, ஒரு கிராம் ரூ.8,775க்கு விற்பனையானது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்துவருகிறது. இந்நிலையில், கடந்த 21ம் தேதி தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,440-க்கு விற்றது. மே 22-ம் தேதி தங்கம் விலை மேலும் உயர்வை சந்தித்தது.
மேலும் நாடுகளுக்கிடையிலான போர் பதற்றங்கள், அமெரிக்காவின் அடுத்தடுத்த அறிவிப்புகள் அனைத்தும் சில நாட்களாக இல்லாத நிலையில், மீண்டும் தங்கம் விலை தற்போது சரிந்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் தங்கத்தின் விலை இன்று (மே 29) சவரனுக்கு ரூ 320 குறைந்து ஒரு சவரன் ரூ 71,160-க்கு விற்பனையாகிறது. நேற்று தங்கம் விலை எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று ரூ 320 குறைந்துள்ளது. இது நகை பிரியர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
வெள்ளி விலை இன்று சற்று குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 110.10 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,10,100க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.