தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்: இனி குறையுமா?

இன்று தங்கம் விலை வரலாறு காணாத அளவில் உச்சத்தை தொட்டுள்ளது. இதனால், நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இன்று தங்கம் விலை வரலாறு காணாத அளவில் உச்சத்தை தொட்டுள்ளது. இதனால், நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
gold silver price today 29 november 2023 chennai in tamil

சென்னையில் 24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,404-க்கும், ஒரு சவரன் ரூ.51,232-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Gold-rate | gold Price today | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் போர் காரணமாக கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

Advertisment

தங்கத்தின் விலை திங்கள்கிழமை  சவரனுக்கு ரூ. 200 அதிரடியாக அதிகரித்து ஒரு சவரன் ரூ.46,240-க்கும், கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,780-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று செவ்வாய்க்கிழமை தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி முந்தைய நாள் விலையில் விற்பனையாகியது.

இந்நிலையில், இன்று தங்கம் விலை வரலாறு காணாத அளவில் உச்சத்தை தொட்டுள்ளது. இதனால், நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்துஒரு சவரன் ரூ. 46,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,870-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,404-க்கும், ஒரு சவரன் ரூ.51,232-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment
Advertisements

எப்போதும் குறையும் தங்கம் விலை? 

தங்கம் விலை இன்று மளமளவென அதிகரித்துள்ள நிலையில், எதிர்வரும் நாட்களிலும் விலை உயரும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

வெள்ளி விலை 

வெள்ளி விலையும் அதிரடியாக அதிகரித்துள்ளது. கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து வெள்ளி ஒரு கிராம் ரூ.82.20-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.82,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Gold Rate Business Gold

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: