/indian-express-tamil/media/media_files/2025/10/01/istockphoto-2218969499-612x612-1-2025-10-01-08-32-58.jpg)
தங்கம் விலை இன்று 2-வது முறையாக உயர்வு: ஒரே நாளில் ரூ.2,000 அதிகரிப்பு!
தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.97 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தீபாவளிக்கு பிறகு தங்கம் விலை குறைந்து வருகிறது. முன்னதாக தினமும் காலை, பிற்பகல் என இருவேளைகளிலும் தாறுமாறாக விலை உயர்ந்து வந்தது. இதே வேகத்தில் சென்றால், ஒரு சவரன் ரூ.1 லட்சத்தையும் தாண்டிவிடும் என்றெல்லாம் வியாபாரிகள் சொன்னார்கள். இப்படி இருந்த சூழல் அப்படியே தலைகீழாக மாறியது. கடந்த 18-ந் தேதியில் இருந்து விலை குறைந்து கொண்டே வருகிறது. விலை ஏற்றம் ராக்கெட் வேகத்தில் இருந்த நிலையில், தற்போது விலை இறக்கம் சீட்டுக்கட்டு போல சரியத் தொடங்கியிருந்தது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதன்படி கிராமுக்கு ரூ.135-ம், சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 210-க்கும், ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்து 680-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ஆயிரம் ரூபாயும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.166-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று ஒரேநாளில் 2-முறையாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.115-ம், சவரனுக்கு ரூ.920-ம் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,325-க்கும், சவரன் ரூ.90,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.2,000 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
29.10.2025 ஒரு சவரன் ரூ.90,600 (மாலை)
29.10.2025 ஒரு சவரன் ரூ.89,680 (காலை)
28.10.2025 ஒரு சவரன் ரூ.88,600 (நேற்று)
27.10.2025 ஒரு சவரன் ரூ.91,600
26.10.2025 ஒரு சவரன் ரூ.92,000
25.10.2025 ஒரு சவரன் ரூ.92,000
24.10.2025 ஒரு சவரன் ரூ.91,200
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us