Gold Rate: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் போர் காரணமாக கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்தது. இதேபோல் செவ்வாய்க்கிழமையும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்தது. மறுநாள் புதன்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்தது. இதேபோல், தொடர்ந்து 4வது நாளாக வியாழக்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 அதிரடியாக உயர்ந்தது.
ஆனால், நேற்று வெள்ளிக்கிழமை தங்கம் விலை சட்டென சவரனுக்கு ரூ. 280 குறைந்து ஒரு சவரன் ரூ. 47,280-க்கும், கிராமுக்கு ரூ. 35 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,910-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை
இந்த நிலையில், இன்று தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனையாகிறது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ. 47,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,910-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,447-க்கும், ஒரு சவரன் ரூ. 51,576-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“