Gold Silver Price Today, 30 March 2024 | Gold Rate: இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 அதிகரித்தது. இருப்பினும், செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்தது. ஆனால், மறுநாள் புதன்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 அதிகரித்தது. இதேபோல், வியாழக்கிழமை சவரனுக்கு ரூ. 280 அதிகரித்தது. தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை தங்கம் விலை வரலாற்றில் முதல் முறையாக உச்சபட்ச விலையை எட்டியது. சவரனுக்கு ரூ. 1120 அதிகரித்த தங்கம் விலை ஒரு சவரன் ரூ. 51,120 -க்கும், கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,390-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை
இந்த நிலையில், தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. இது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்து ஒரு சவரன் ரூ. 50,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 20 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,370-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,949-க்கும், ஒரு சவரன் ரூ. 55,592 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.81,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“