Gold-rate | gold | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நிலவி வருவதால், இந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
கடந்த சனிக்கிழமை அன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரித்து அதிர்ச்சி கொடுத்தது. இதனால் நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் விழிபிதுங்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.288 அதிரடியாக குறைந்து, ஒரு சவரன் ரூ.45,880-க்கும், கிராமுக்கு ரூ.36 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,735 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.45,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,715 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,235-க்கும், ஒரு சவரன் ரூ. 49,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலையைப் பொறுத்தவரை, கிராமுக்கு ரூ. 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.78,200-க்கு விற்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“