Gold, Silver Prices Today in Chennai tamil: உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு, ஜி – 7 உச்சி மாநாட்டில் ரஷ்ய தங்கத்தின் மீதான இறக்குமதிக்கு விதிப்பட்டுள்ள தடை பதற்றம், அமெரிக்காவின் முதல் காலாண்டு ஜிடிபி தரவு வெளியீடு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, இந்த வாரம் நடைபெற இருக்கும் கச்ச எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் ஓபேக் கூட்டம் மற்றும் தங்க இறக்குமதிக்கு இந்தியா விதித்துள்ள புதிய வரி ஆகியவை தங்கத்தின் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனால், கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலையில் திடீர் ஏற்றமும், அதிரடியான இறக்கமுமாக இருந்து வருகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான சமீபத்திய இந்திய ரூபாய் மதிப்பு 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் வீழ்ச்சியை கண்டுள்ள நிலையில், மற்ற நாணயங்களை வைத்திருப்பவர்களை தங்கத்தின் பக்கம் முதலீடு செய்ய திருப்பியுள்ளது. மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச்சில் தங்கம் 0.36 சதவீதம் அல்லது ரூ 187 அதிகரித்து 10 கிராமுக்கு ரூ 52,104 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது. வெள்ளியின் விலை 0.43 சதவீதம் அல்லது ரூ.250 அதிகரித்து ஒரு கிலோவுக்கு ரூ.58,425 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது.
இந்தியாவில் தங்கம் விலை:
இந்நிலையில், இந்தியாவில் இன்று (ஜூலை 4ஆம் தேதி) தங்கம் விலை அதிகரித்து உள்ளது. அதன்படி, தலைநகர் டெல்லியில் 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 48,000 ஆகவும், 10 கிராம் 24 காரட் தங்கம் ரூ. 52,340 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இது இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களுக்கு மாறுபடும்.
அதன்படி அண்டை மாநிலமான கேரளாவில் 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 48,000 ஆகவும், 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 52,340 ஆகவும் உள்ளது. விசாகப்பட்டினத்தில் தங்கத்தின் விலை ரூ. 10 கிராம் 22 காரட் 48,000 மற்றும் 10 கிராம் 24 காரட் தங்கம் ரூ. 52,340 ஆகவும் உள்ளது.
மறுபுறம், ஐதராபாத், கேரளா மற்றும் விசாகப்பட்டினத்தில் வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ரூ. 63,500 ஆகவும், பெங்களூரில் வெள்ளியின் விலை ரூ. 63,500 ஆகவும் உள்ளது.
சென்னையில் தங்கம் விலை:-
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 அதிகரித்து ரூ.4,810 ஆகவும், சவரனுக்கு ரூ.144 அதிகரித்து ரூ.38, 480 ஆகவும் விற்பனையாகிறது. மேலும், 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.48, 100 ஆகவும், 24 காரட் 10 கிராமுக்கு ரூ.52,480 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை:-
நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.63. 50 காசுக்கு விற்பனையாகிய நிலையில், இன்று கிராம் ஒன்று 50 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.64-க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.500 அதிகரித்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.64,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.