Gold, Silver Rates Today News Updates in tamil: உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு உலக பொருளாதாரத்தில் அன்றாட எதிரொலித்து வருகிறது. இதன் விளைவாக கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு, மற்றும் தங்கம் உள்ளிவற்றின் விலையில் கடுமையான ஏற்றமும், மிதமான சரிவுமாக இருந்து வருகிறது. எனவே, பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யும் மக்கள் பாதுகாப்பான முதலீடாக கருதும் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள்.
Advertisment
இவற்றுடன், ஜி-7 உச்சி மாநாட்டில் எட்டப்பட்ட ரஷ்ய தங்க இறக்குமதிக்கு தடை முடிவு, தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்காக அதன் மீது இந்தியா விதித்துள்ள புதிய சுங்க வரி (15 சதவீதம்), அமெரிக்கா, இந்தியாவில் நிலவும் பணவீக்கம், டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் வரலாறு காணாத வீழ்ச்சி உள்ளிட்டவை தங்கத்தின் விலையில் தினந்தோறும் மாற்றத்தை கொண்டு வருகின்றன.
தங்கம், வெள்ளி விலை நிலவரம்:-
இந்நிலையில், இந்தியாவின் தலைநகரான டெல்லியில் இன்று, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 50 குறைந்து, ரூ. 4,760 க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ. 38,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 47, 600 ஆகவும், 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை 51, 930 ஆகவும் உள்ளது.
சென்னையில் தங்கம் விலை நிலவரம்:-
தமிழகத்தில் இம்மாத தொடக்கம் முதல் தங்கம் விலை ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,805க்கும், சவரன் ரூ.38,440க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இன்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 65 ரூபாயும், சவரனுக்கு 520 ரூபாயும் அதிரடியாக குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.65 குறைந்து, ரூ4,740 ஆகவும், சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.37,920க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 47, 400 ஆகவும், 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை 51, 710 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை
சென்னையில் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 2 ரூபாய் குறைந்து ரூ.62.50க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.2000 குறைந்து ரூ.62,500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.