மாதத்தின் முதல் நாளான இன்று (ஜுன் 1) தங்கம் விலை சற்று குறைந்துள்ளது, நகைப் பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம், வெள்ளி விலை சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தினமும் நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில், இஸ்ரேல் - பாலஸ்தீன போர் காரணமாக தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்தது. சவரன் ரூ.50,000-ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது. சவரன் ரூ.55,000 வரை எட்டிய நிலையில் தற்போது ஏறுவதும், குறைவதுமாக ரூ.54,000க்கு கீழ் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் இன்று கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,710க்கு விற்பனையாகிறது. சவரன் ரூ.53,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.98க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.98,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“