சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை போல் தங்கம், வெள்ளி விலையும் தினசரி அடிப்படையில் சர்வதேச சூழல் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.
கடந்தாண்டு தங்கம் விலை குறைந்திருந்த நிலையில், தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீன போர் காரணமாக தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது. சவரன் ரூ.50,000-ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் குறைந்து காணப்பட்ட தங்கம் விலை இன்று (மே 27) வாரத் தொடக்கத்தில் முதல் நாளே ரூ.520 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது.
இன்று தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,720-க்கும் சவரன் ரூ.53,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 97.50-க்கும் பார் வெள்ளி ரூ.97,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை உயர்வால் நடுத்தர மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“