இந்த வாரத்தில் 2-வது நாளாக தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தங்கம், வெள்ளி விலை தினமும் நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்படும். அந்த வகையில், இஸ்ரேல் - பாலஸ்தீன போர் காரணமாக தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்தது. சவரன் ரூ.50,000-ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரம் தங்கம் விலை சற்று குறைந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.520 உயர்ந்தது. இந்நிலையில் இன்று (மே 28) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,740-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் வெள்ளியின் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.3.50 உயர்ந்து ஒரு கிராம் ரு.101.50-க்கும், ஒரு கிலோ ரூ.1,01,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“