Gold-rate | gold | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை அதிரடியாக சரிந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,500-க்கும் சரிந்துள்ளது. இதனால் நகைப் பிரியர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ. ரூ.42,880-க்கும், கிராமுக்கு ரூ. 30 குறைந்து ஒரு கிராம் ரூ.5,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் அதிரடியாக சரிந்துள்ளது.
இன்று காந்தி ஜெயந்தி விடுமுறையை ஒட்டி தங்கம் விலை சவரனுக்கு ரூ.195.20 அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.195.20 குறைந்து ரூ.42,684.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.24.40 குறைந்து ரூ.5,335.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5,843-க்கும், ஒரு சவரன் ரூ.46,744-க்கும் விற்பனையாகியது.
மதுரை தங்கம் விலை
மதுரையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,320-க்கும், ஒரு சவரன் 42, 560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது கிராமுக்கு 50 காசுகள் குறைந்துள்ள வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.75. 50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.75,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“