Gold-rate | gold | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை அதிரடியாக சரிந்தது. கடந்த 20 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,000-க்கும் மேல் சரிந்தது காணப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் மற்றும் நகைப் பிரியர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருந்தனர்.
நேற்று புதன்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிரடியாக குறைந்து ஒரு சவரன் ரூ.42,280-க்கும், கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.5,285-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.42,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.5,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5,776-க்கும், ஒரு சவரன் ரூ.46,208-க்கும் விற்பனையாகிகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையைப் போல் வெள்ளியின் விலையும் அதிரடியாக அதிகரித்துள்ளது. கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்துள்ள வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.73.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.73,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“