Advertisment

இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்: ஆட்டம் காட்டும் தங்கம் விலை

இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னை இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
 Gold Silver Prices Today 09 October 2023 CHENNAI in Tamil

சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5,853-க்கும், ஒரு சவரன் ரூ.46,824-க்கும் விற்பனையாகிறது.

gold-rate | gold | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை அதிரடியாக சரிந்து காணப்பட்டது. இம்மாதம் 4-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.42,280-க்கு குறைந்து விற்பனையாகியது. 

Advertisment

தங்கம் விலை குறையத் தொடங்கியதைக் கண்டு நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அவர்களது மகிழ்ச்சி ஓரிரு நாட்கள் கூட நீடிக்கவில்லை. காரணம், நேற்று முன்தினம் சனிக்கிழமை தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர். இந்தப் போர்  பதற்றம் காரணமாக சனிக்கிழமை மலையில் தங்கம் விலை அதிரடியாக அதிகரித்தது. 

சவரனுக்கு ரூ.680 அதிகரித்த தங்கம் விலை ஒரு சவரன் ரூ.42,960-க்கும், கிராமுக்கு ரூ.85 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,370-க்கும் விற்பனையாகியது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னை இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,365-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5,853-க்கும், ஒரு சவரன் ரூ.46,824-க்கும் விற்பனையாகிறது. 

வெள்ளி விலை 

வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 75.50- க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.75,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Gold Rate Business Gold
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment