Gold-rate | gold | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை அதிரடியாக சரிந்து காணப்பட்டது. இம்மாதம் 4-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.42,280-க்கு குறைந்து விற்பனையாகியது.
தங்கம் விலை குறையத் தொடங்கியதைக் கண்டு நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அவர்களது மகிழ்ச்சி ஓரிரு நாட்கள் கூட நீடிக்கவில்லை. காரணம், நேற்று முன்தினம் சனிக்கிழமை தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர். இந்தப் போர் பதற்றம் காரணமாக சனிக்கிழமை மலையில் தங்கம் விலை அதிரடியாக அதிகரித்தது.
சவரனுக்கு ரூ.680 அதிகரித்த தங்கம் விலை ஒரு சவரன் ரூ.42,960-க்கும், கிராமுக்கு ரூ.85 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,370-க்கும் விற்பனையாகியது. நேற்று திங்கள் கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,920-க்கு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,365-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கம் மீண்டும் சட்டென எகிறியுள்ளது. இதனால், நகைப் பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சென்னை இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ.43,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.5,380-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5,869-க்கும், ஒரு சவரன் ரூ.46,952-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை
நேற்று வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 75.50- க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்று விற்பனையாகியது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ. 75.50- க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“