Gold, Silver Prices chennai Today in tamil: உலகில் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றாக வலம் வரும் ரஷ்யா அதன் அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி முதல் படைப்பு நடத்தி போர் தொடுத்து வருகிறது. ரஷ்யாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடுக்கும் வகையில் பொருளாதர தடைகளை விதித்தன.
இந்த தடைகளால் ரஷ்ய பாதிப்பை சந்தித்ததோ இல்லையோ, பொருளாதார தடை விதித்த நாடுகளும், வளர்ந்து வரும் நாடுகளும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. உலக பொருளாதார வளர்ச்சில் ரஷ்யா முக்கிய நாடக இருந்து வரும் நிலையில், அதன் மீது விதிப்பட்ட தடையின் காரணமாக, ஐரோப்பிய நாடுகளில் எரிபொருட்கள், இயற்கை எரிவாயு போன்றவற்றின் விலை உச்சத்தை தொட்டுள்ளது.
அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் பண வீக்கம் அதிகரித்து வருகிறது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி கடந்த வாரம், பணவீக்கத்தின் அதிகரிப்பைத் தடுக்க, கால் நூற்றாண்டுக்கும் மேலாக அதன் மிகப்பெரிய வட்டி விகித அதிகரிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல், இந்தியாவும் அதன் ரெபோ வட்டியை அதிகரித்துகிறது.
இதேபோல், உலகின் மிகப்பெரிய மத்திய வங்கிகள் சில அதிகரித்து வரும் பணவீக்கத்தைப் பற்றி கவலைப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்த வங்கிகள் ஆச்சரியமான செயல்களை செய்ய திட்டமிட்டு வருகின்றன. இது தங்க பத்திர முதலீட்டாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எனவே, தங்கம் மற்றும் ஒவ்வொரு வட்டி-விகித அதிகரிப்பும் முதலீட்டுக்கு ஆபத்தை கொண்டு வரும்.
தவிர, தங்கம் மற்றும் வெள்ளி பணவீக்க ஹெட்ஜ் எனப் பார்க்கப்பட்டாலும், அதிக வட்டி விகிதங்கள் மற்றும் தங்க பத்திரத்தை வைத்திருப்பதற்கான வாய்ப்புச் செலவை அதிகரிக்கின்றன. இது எதையும் தராது. இதனால், முதலீட்டார்கள் தற்போது தங்கத்தில் முதலீடு செய்வதில் இருந்து வெளியேறி வருகின்றனர். இதன் காரணமாக தங்கத்தின் விலையில் அன்றாட மாற்றம் நிகழ்ந்து வருகிறது.
தங்கம் விலை

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், தங்கத்தின் விலை இம்மாத தொடக்கத்தில் அதாவது, ஜூன் 1ஆம் தேதி அன்று சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 37,920 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் மறுநாளே ரூபாய்.160 உயர்ந்து, சவரன் 38,080 ரூபாய்க்கு விற்பனையானது.
இதன்பிறகு, கடந்த செவ்வாய் கிழமை (ஜூன் 14) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 95 ரூபாய் அதிரடியாகக் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 4,740க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு 760 ரூபாய் அதிரடியாகக் குறைந்து 37,920 ரூபாயக்கு விற்பனையானது. இதேபோல், மறுநாள் புதன்கிழமை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து விற்பனையானது. அதன்படி சென்னையில், கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 4,715க்கும், சவரன் 37,720ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால், அதன் பிறகான நாட்களில் தங்கத்தின் விலை அதிகரித்த வண்ணம் இருந்து. அவ்வகையில், சென்னையில் நேற்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,775 ஆக உயர்ந்தது. இதேபோல், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 80 ரூபாய் உயர்ந்து 38,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.4,765-க்கு விற்பனையாகி வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, சவரன் ரூ.38,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை
வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகி வருகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று 66.30 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி 66,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்றும் அதே விலைக்கு விற்பனையாகி வருகிறது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil