Gold-rate | gold | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை கடந்த திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.160 உயர்ந்தது. இதேபோல் மறுநாள் செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.44,400-க்கு விற்பனையாகியது.
ஆனால் புதன்கிழமை தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையிலே நீடித்தது. இது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்த நிலையில், நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிரடியாக சரிந்தது. இது கூடுதல் மகிழ்ச்சியை கொண்டுவந்தது. இதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,530-க்கும், ஒரு சவரன் ரூ.ரூ. 44,240-க்கும் விற்பனையாகியது.
இந்நிலையில், தங்கம் விலை இன்றும் அதிரடியாக சரிந்துள்ளது. அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ. 44,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.5,510-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,011-க்கும், ஒரு சவரன் ரூ.48,088-க்கும் விற்பனையாகியது.
வெள்ளி விலை
வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.7,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“