Advertisment

மீண்டும் பல்டி அடித்த தங்கம் விலை... அதிர்ச்சியில் நகைப் பிரியர்கள்!

தங்கம் விலை இன்று மீண்டும் பல்டி அடித்து அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்துள்ளது.

author-image
WebDesk
New Update
 Gold Silver Prices Today 23 September 2023 CHENNAI

சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,023-க்கும், ஒரு சவரன் ரூ.48,184-க்கும் விற்பனையாகியது.

Gold-rate | gold | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை கடந்த திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.160 உயர்ந்தது. இதேபோல் மறுநாள் செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.44,400-க்கு விற்பனையாகியது.

Advertisment

ஆனால் புதன்கிழமை தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையிலே நீடித்தது. இதேபோல் நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிரடியாக சரிந்தது. தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமையும் தங்கம் விலை அதிரடியாக சரிந்தது. சவரனுக்கு ரூ.160 குறைந்த தங்கம் விலை ஒரு சவரன் ரூ. 44,080-க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.5,510-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இந்த நிலையில், தங்கம் விலை இன்று மீண்டும் பல்டி அடித்து அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.44,168-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ரூ.5,521-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,023-க்கும், ஒரு சவரன் ரூ.48,184-க்கும் விற்பனையாகியது.

வெள்ளி விலை

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசு உயர்ந்து ரூ.79.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.79,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Gold Rate Business Gold
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment