Advertisment

Today Gold, Silver Rate: தங்கம் விலை ரூ230 சரிவு; வெள்ளி கிலோவுக்கு இவ்வளவு ரேட்!

Gold, Silver Rates Today News Updates in tamil: இந்தியாவில் தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. அதன்படி தங்கம் விலை நேற்றைய தினத்தை விட இன்று ரூ.230 குறைந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Gold, Silver Prices Today; 25 June 2022, gold price descends Rs.230

Gold, Silver Prices Today in Chennai tamil

Gold, Silver Prices Today in Chennai tamil: உக்ரைன் மீதான ரஷ்ய போர் உலக பொருளாதாரத்தில் அதிகமாக எதிரொலித்து வருகிறது. இதேபோல் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் நிலவி வரும் பணவீக்கம் சர்வதே பொருளாதாரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இவை தவிர, சர்வதேச சந்தையில் கச்ச எண்ணெய் விலை உயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்த்த செய்துள்ளது. பங்குகள் தொடர் சரிவையும், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.

Advertisment

பாதுகாப்பான முதலீடாக கருத்தப்படும் தங்கம் பணவீக்க தாக்கத்தால் அதிகளவில் வட்டியைப் பெற போவதில்லை. இதனால், சில முதலீட்டார்கள் குறைந்த விலையில் கிடைக்கும் பங்குகளை வாங்கி வருகிறார்கள். சில முதலீட்டார்கள் பாதுகாப்பான முதலீடாக உள்ள தங்கம் பக்கம் திரும்பியுள்ளனர். இதனால், தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கம் நிலவி வருகிறது.

அவ்வகையில், இந்தியாவில் தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. அதன்படி தங்கம் விலை நேற்றைய தினத்தை விட இன்று ரூ.230 குறைந்துள்ளது. 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.51,760 ஆகவும், 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.47,450 ஆகவும் விற்பனையாகி வருகிறது. வெள்ளியின் விலையும் குறைந்துள்ள நிலையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.60,000க்கு விற்பனையாகிறது.

டெல்லி, கொல்கத்தா மற்றும் பெங்களூரில் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.51,820 ஆக விற்பனையாகி வருகிறது. இதேபோல், டெல்லி, கொல்கத்தா மற்றும் பெங்களூரில் 10 கிராம் 22 காரட் தங்கம் ரூ.47,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் தங்கம் விலை:-

சென்னையைப் பொறுத்தவரை, இம்மாத தொடக்கத்தில் அதாவது ஜூன் முதல் தேதி தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 37,920 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் மறுநாளே தங்கத்தின் விலையில் உயர்வு ஏற்பட்டது. இதனால் ஜூன் 2ஆம் தேதி தங்கம் விலை 160 ரூபாய் உயர்ந்து, சவரன் 38,080 ரூபாய்க்கு விற்பனை ஆகியது. பின்னர் வந்த நாட்களிலும் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தது.

ஆனால், கடந்த 14ம் தேதி தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்தது. அப்போது ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 95 ரூபாய் குறைந்தும், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்தும் ஒரு கிராம் தங்கம் 4,740க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.37,920-க்கும் விற்பனையானது.

publive-image

மீண்டும் மறுநாள், 15ம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ரூ.4,715க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் 37,720 ரூபாய்க்கும் விற்பனையாகியது.

இதன்பிறகான நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்தும், ரூ.80 குறைந்தும் விற்பனையாகியது. மேலும், விலையில் ஏற்றமும், இறக்கமும் பெரிய தொகையை எட்டாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 அதிகரித்து ரூ.4,760 ஆகவும், சவரனுக்கு ரூ. 56 அதிகரித்து ரூ.38, 080 ஆகவும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலை நிலவரம்:-

சென்னையில் வெள்ளி கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் குறைந்து, கிராம் ரூ.65.70 காசுக்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.66,000க்கு விற்பனையாகி வருகிறது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Gold Rate Business Tamil Business Update Gold Gold Selling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment