Gold-rate | gold | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை இன்று திங்கள்கிழமை குறைந்துள்ளது. நேற்று முன்தினம் சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,168-க்கும், கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,521-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ.44,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்தது ரூ.5,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,022-க்கும், ஒரு சவரன் ரூ.48,176-க்கும் விற்பனையாகியது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலையும் சற்று குறைந்த்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.79,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“