சட்டென சரிந்த தங்கம்; 5 மடங்கு குறைந்த வெள்ளி... நகைப் பிரியர்களுக்கு குட் நியூஸ்!

இன்று தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.

இன்று தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Gold Silver Prices Today 26 September 2023 CHENNAI

சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,005-க்கும், ஒரு சவரன் ரூ.44,040-க்கும் விற்பனையாகியது.

Business | gold-rate | gold: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று திங்கள்கிழமை சற்று குறைந்தது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்து ஒரு சவரன் ரூ.44,160-க்கும், கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.5,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

Advertisment

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. அதன்படி, சென்னையில்  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்தது ரூ.5,505-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,005-க்கும், ஒரு சவரன் ரூ.44,040-க்கும் விற்பனையாகியது.

வெள்ளி விலை 

Advertisment
Advertisements

வெள்ளியின் விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. நேற்று வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.00-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.1.40 குறைந்து ரூ.77.60-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ வெள்ளி ரூ.77,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Gold Rate Business Gold

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: