Gold-rate | gold | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.120 அதிரடியாக சரிந்தது.
இதேபோல் நேற்று புதன்கிழமையும் தங்கம் விலை மளமளவென சரிந்தது. இதன்படி, சவரனுக்கு ரூ.200 குறைந்த தங்கம் விலை ஒரு சவரன் ரூ.43,840-க்கும், கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.5,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இது நகைப் பிரியர்களுக்கு நல்ல செய்தியாக கிடைத்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ. 43,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.5,410-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5,902-க்கும், ஒரு சவரன் ரூ.47,216-க்கும் விற்பனையாகியது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.76.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.76,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“