Gold-rate | gold | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை அதிரடியாக சரிந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 சரிந்துள்ளது. இதேபோல் கிராமுக்கு ரூ.190 குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ. 43,120-க்கும், கிராமுக்கு ரூ. 20 குறைந்து 5,390-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.42,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,360-க்கு விற்பனை செ ய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலையும் அதிரடியாக சரிந்துள்ளது. கிராமுக்கு ரூ.1.50 குறைந்துள்ள வெள்ளி விலை ரூ.76-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.76,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“