Advertisment

உயர்ந்து வரும் தங்கம் விலை: பண்டிகைக் கால நிலவரம்

Gold Silver Rate in Delhi, Chennai - 19th October: 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,127 என சவரனுக்கு ரூ. 41,016 ஆக விற்பனையாகிறது.

author-image
WebDesk
Oct 19, 2022 11:51 IST
உயர்ந்து வரும் தங்கம் விலை: பண்டிகைக் கால நிலவரம்

Gold Silver Rate in Delhi, Chennai - 19th October

Gold, Silver Rates Today News Updates in Tamil, 19th October: உலகச் சந்தைகளில், அமெரிக்க டாலர் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததைத் தொடர்ந்து தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

Advertisment

எரிசக்தி நெருக்கடி ஐரோப்பிய பொருளாதாரத்தை மந்தநிலைக்குள் தள்ளக்கூடும் என்கிற காரணத்தினால், யூரோ டாலருக்கு இணையாக மதிப்பு இருந்தது. டாலரின் வலிமை மற்ற நாணயங்களை வாங்குபவர்களுக்கு கிரீன்பேக்-விலை தங்கத்தின் விலையை உயர்த்துகிறது.

publive-image

இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:

இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பையில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 46,700 ஆக உள்ளது. நேற்றைய விலையில் இருந்து ரூ.130 அதிகரித்துள்ளது. 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 50,950 ஆக உள்ளது. நேற்றைய விலையில் இருந்து ரூ.160 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய மூன்று நகரங்களிலும் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ. 56,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையில் இருந்து கிலோவிற்கு ரூ.200 குறைந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை:

தமிழகத்தில் இம்மாத தொடக்கம் முதல், தங்கம் விலையில் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.5 குறைந்து, ரூ. 4,700 ஆகவும், சவரனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.37,600க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,127 என சவரனுக்கு ரூ. 41,016 ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று வெள்ளியின் விலையில் கிராமுக்கு ரூ.0.30 குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி கிராமுக்கு ரூ.61.50க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.61,500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவிற்கு ரூ.300 குறைந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Chennai #Tamil Nadu #Gold #Gold Investment #Gold Rate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment