scorecardresearch

சரிந்து வரும் தங்கம்- வெள்ளி விலை: இல்லத்தரசிகள் இன்று நகை வாங்கலாமா?

Gold Silver Price in Metropolitan Cities – 12th December: சென்னையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,514 என சவரனுக்கு ரூ. 44,112 ஆக விற்பனையாகிறது.

Markets Wrap Mon 6 Feb 23 Stocks tank rupee falls
இன்றைய வர்த்தகத்தில் தங்கம் விலை அதிகரித்து காணப்பட்டது.

Gold, Silver Rates Today News Updates in Tamil, 12th December: இந்தியாவில் கடந்த சில நாட்களாக தங்கத்தில் விலை குறைந்துகொண்டிருந்தது. இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் தங்கம் வெள்ளியின் விலை சரிந்து வந்தாலும், சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இன்று சென்னையிலும் இந்தியாவின் மற்ற பெருநகரங்களிலும் தங்கம் வெள்ளியின் விலை என்ன என்பதை காணலாம்:

இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:

டெல்லி: இந்தியாவின் தலை நகரமான டெல்லியில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. ஒரு கிராம் ரூ.4,995 என்று, 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ. 39,960 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து, சவரனுக்கு ரூ.80 குறைந்தது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,449 என்று, சவரனுக்கு ரூ.43,592 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து, சவரனுக்கு ரூ.80 குறைந்தது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லியில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ. 67,700 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.400 குறைந்தது.

மும்பை: மும்பையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,980 என்றும் சவரனுக்கு ரூ. 39,840 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து, சவரனுக்கு ரூ.80 குறைந்தது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,433 ஆகவும் சவரனுக்கு ரூ. 43,464 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.11 குறைந்து, சவரனுக்கு ரூ.88 குறைந்தது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, மும்பையில் இன்று ஒரு கிலோ ரூ. 67,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.300 குறைந்தது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,980 என்றும் சவரனுக்கு ரூ. 39,840 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து, சவரனுக்கு ரூ.80 குறைந்தது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,433 என்றும் சவரனுக்கு ரூ. 43,464 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.11 குறைந்து, சவரனுக்கு ரூ.88 குறைந்தது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, கொல்கத்தாவில் இன்று ஒரு கிலோ ரூ.67,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.300 குறைந்தது.

பெங்களூர்: பெங்களூரில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,985 என்றும் சவரனுக்கு ரூ. 39,880 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து, சவரனுக்கு ரூ.80 குறைந்தது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,439 என்றும் சவரனுக்கு ரூ. 43,512 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து, சவரனுக்கு ரூ.80 குறைந்தது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, பெங்களுருவில் இன்று ஒரு கிலோ ரூ. 73,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

ஹைதெராபாத்: ஹைதெராபாதில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,980 என்றும் சவரனுக்கு ரூ.39,840 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து, சவரனுக்கு ரூ.80 குறைந்தது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,433 என்றும் சவரனுக்கு ரூ. 43,464 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.11 குறைந்து, சவரனுக்கு ரூ.88 குறைந்தது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, இன்று ஒரு கிலோ ரூ. 73,100 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.100 அதிகரித்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை:

தமிழகத்தில் இம்மாத தொடக்கம் முதல், தங்கம் விலையில் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5,054 ஆகவும், சவரனுக்கு ரூ.40,432க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.1 குறைந்து, சவரனுக்கு ரூ.8 குறைந்தது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,514 என சவரனுக்கு ரூ. 44,112 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.1 குறைந்து, சவரனுக்கு ரூ.8 குறைந்தது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.73.10க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.73,100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.100 அதிகரித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Gold silver rate in metropolitan cities 12th december

Best of Express