ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்: ஹாட் ஸ்டார் வீடியோக்களை இலவசமாக பார்க்கலாம்!

ஏர்டெல் டிவியில் இனி, இலவசமாக ஹாட்ஸ்டார் வீடியோக்களை சந்தாகாரர்கள் கண்டுக்களிக்கலாம்.

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இனி ஏர்டெல் டிவியில் ஹாட் ஸ்டார் வீடியோக்களை இலவசமாக கண்டுக்களிக்கலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் நெட் ப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார் இணையதளங்கள் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையை அளித்து வருகின்றன. ஜியோவின் வருகைக்குன் பின்னர், இந்த வீடியோ ஸ்ட்ரீமிங்கை அதிகளவில் மக்கள் பயன்படுத்த துவங்கினார். முன்பேல்லாம், சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை கேபிள் சேன்ல்களில் பார்த்து வந்த காலம் மாறி, தவறவிட்ட நிகழ்ச்சிகள் அல்லது மீண்டும் பார்க்க விரும்பும் படங்கள், சீரியல்களை ஹாட் ஸ்டார் போன்ற வீடியோ ஸ்ட்ரீமிங் செயலில் பார்த்துக் கொள்ளும் பழக்கம் மேலூங்கியுள்ளது.

இதனையடுத்து, ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஜியோ டிவி சேவையை அறிமுகப்படுத்தியது. இந்த ஜியோ டிவி ஆப் மூலம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிமும் டிவி சேனல்களை முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாக பார்த்துக் கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து , ஏர்டெல் நிறுவனமும் ஜியோவிற்கு போட்டியாக ஏர்டெல் டிவியை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதில், 300-க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்களை வழங்குவதாகவும், 6000-க்கும் அதிகமான திரைப்படங்கள் மற்றும் பிரபலமான நிகழ்ச்சிகளும் அணுக கிடைக்கும் என்றும் அறிவித்திருந்தது.

டெலிகாம் சந்தையில் தொடங்கிய ஜியோ- ஏர்டெல்லின் போட்டி நாளுக்குள் நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. இந்நிலையில், தற்போது பார்தி ஏர்டெல் அதன் ஏர்டெல் டிவி பயன்பாட்டின் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையில் முன்னணி நிறுவனமாக திகழும் ஹாட் ஸ்டாருடன் ஏர்டெல் நிறுவனம் புதிய ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது. ஏர்டெல் போஸ்ட்பெயிட் மற்றும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் இலவச சந்தா அடிப்படையில் இனி ஹாட்ஸ்டாரில் வரும் வீடியோக்களை இலவசமாக கண்டுக்களிக்கலாம் என்பதே அந்த புதிய அறிவிப்பு. ஜியோவிற்கு பிறகு ஹாட்ஸ்டாருடன் கைகோர்த்துள்ள முதல் டெலிகாம் நிறுவனம் ஏர்டெலேயாகும்.

இந்த புதிய அறிவிப்பின் படி, ஏர்டெல் டிவியில் இனி, இலவசமாக ஹாட்ஸ்டார் வீடியோக்களை சந்தாகாரர்கள் கண்டுக்களிக்கலாம்.

×Close
×Close