/tamil-ie/media/media_files/uploads/2019/12/template-2019-12-03T112003.289.jpg)
Life Insurance Corporation ,LIC,LIC waived off convenience fee,Mylic App, லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன், எல்ஐசி, வசதி கட்டணம், பிரீமியம், புது பாலிசி
மாத பிரீமியம் உள்ளிட்ட எல்ஐசியின் சேவைகளுக்கு கிரெடிட் கார்டுகளின் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு டிசம்பர் 1ம் தேதி முதல் எவ்வித கூடுதல் கட்டணங்களும் வசூலிக்கப்படுவதில்லை என்று லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் (எல்ஐசி) நிறுவனம் அறிவித்துள்ளது.
நாட்டின் முன்னணி பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் நிறுவனம், டிஜிட்டல் பணபரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு, இணையதள சேவையை பயன்படுத்தி கட்டணம் செலுத்துதலில் வசூலிக்கப்பட்டு வந்த convenience fee ( வசதி கட்டணம்) இனிமேல் வசூலிக்கப்படமாட்டாது என்றும், இந்த நடைமுறை, 2019 டிசம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
லைப் இன்சூரன்ஸ் வர்த்தக சந்தையில், எல்ஐசி நிறுவனம் 70 சதவீதத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எல்ஐசியில் புதிய பாலிசி எடுத்தல், பிரீமீயம் செலுத்துதல், லோன் திரும்ப கட்டுதல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு கிரெடிட் கார்டு மூலம் செலுத்தும்போது அதற்கு விதிக்கப்பட்டு வந்த வசதி கட்டணம் இனி வசூலிக்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளுக்கு எல்ஐசி வாடிக்கையாளர்கள், Mylic App பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.