இந்தியன் ஒவர்சீஸ் வாடிக்கையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

சில வங்கிகளும் வட்டி விகிதத்தை குறைத்து வருகின்றது.

By: June 11, 2019, 4:53:41 PM

இந்தியன் ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25% சதவிகிதம் குறைத்த நிலையில், இந்திய ஓவர்சீஸ் வங்கியும் கடனுக்கான வட்டியை குறைத்துள்ளது. மேலும் சில வங்கிகளும் வட்டி விகிதத்தை குறைத்து வருகின்றது.

இந்நிலையில், ஓராண்டு மற்றும் அதற்கு கூடுதலான காலத்திற்கு ஐந்து அடிப்படை புள்ளிகள் என்ற அளவில், கடன்களுக்கான வட்டி விகிதத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி குறைத்துள்ளது.

15 நாட்களுக்கான வட்டி விகிதம் 8.15% சதவிகிதமாகவும், ஒரு மாதத்திற்கான வட்டி விகிதம் 8.30% சதவிகிதமாகவும், 3 மாதங்களுக்கு 8.45% சதவிகிதமாகவும், 6 மாதங்களுக்கு 8.50% சதவிகிதமாகவும், வருடத்திற்கு 8.65% சதவிகிதமாகவும், அதுவே இரண்டு ஆண்டுகளுக்கு 8.75% சதவிகிதமாகவும், 3 ஆண்டுகளுக்கு 8.85% சதவிகிதமாகவும் கடங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடங்களுக்கான வட்டி விகிதம் குறையும் என்றும் குறிப்பாக வீட்டுக் கடன், வாகனக் கடன் வட்டி குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மிகுந்த பயன் அடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியில் பெர்சனல் லோன் வாங்கி இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் வட்டி விகிதம் குறைய அதிகளவில் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Good news for iob costumers

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X