தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி இபிஎஃப்(EPF திட்டம், ஊழியர்களின் எதிர்கால நலன் கருதி
செயல்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில், பணியாளரின் சம்பளத்தில் ஒரு பகுதி மாதா மாதம் பிடித்தம் செய்யப்பட்டு, அவரது
(Employees’ Provident Fund -EPF) கணக்கில் வைக்கப்படுகின்றது. இப்படி பல பலன்களை தரும் பிஎஃப் திட்டத்தில் இனி வரும் காலங்களில் சில மாற்றங்களுடன்
செயல்பட உள்ளது.
அதாவது, இதுவரை பிஎஃப் செலுத்தி வந்தவர்கள், தங்கள் பழைய கணக்குகளை புதிய கணக்குகளோடு
இணைக்க வேண்டும். அப்படி இணைக்க ஒவ்வொரு முறையும் நம் புதிய பிஎஃப் கணக்கு
தொடங்கப்பட்டிருக்கும் அலுவலகங்களுக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த நிலைமாறி தற்போது நம் புதிய பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்டிருக்கும் பிஎஃப் அலுவலகத்துக்கோ
அல்லது ஆன்லைன் முறையிலோ விண்ணப்பிக்கத் தேவையும் இல்லை.
முலும் யு.ஏ.என் எண்கள் மூலம் புதிய பிஎஃப் கணக்கோடு பழைய பிஎஃப் கணக்குகள்
இணைக்கப்பட போகின்றது.
ஒரு முறை புதிய பிஎஃப் கணக்கில், ஒருவர் பணிபுரியும் புதிய நிறுவனம் பணம் போட்டால்
உடனடியாக யு.ஏ.எண்-ஐ வைத்து பழைய கணக்குகளையும் புதிய கணக்குகளோடு ஒப்பிட்டு, சரி
பார்த்து, இதற்கு முன் நம் பழைய பிஎஃப் கணக்கில் இருக்கும் அசல் மற்றும் வட்டியோடு புதிய கணக்கில் இணைக்கப்பட்டு விடும்.
ஆண்டுக்கு ஒரு முறை சுமார் 8 லட்சம் பிஎஃப் கணக்கு மாற்றங்கள் மற்றும் இணைப்புகளுக்கான
விண்ணப்பங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.