Good news for SBI customers : சில வருடங்களுக்கு முன்பு வரை வைப்பு நிதி என்பது சிறப்பான ரிட்டர்ன்ஸ்களை வழங்கும் முக்கியமான ஒரு சேமிப்பு திட்டமாக இருந்தது. இதில் ரிஸ்க்கும் மிக குறைவு என்ற காரணத்தால் பலரும் இதில் தங்கள் சேமிப்பை முதலீடு செய்தனர். ஆனால் சமீப காலங்களில் சிறந்த ரிட்டர்ன்ஸ்களை வழங்கும் வகையில் FD-க்களுக்கு வட்டி அதிகமாக இல்லை. வெகுவாக குறைக்கப்பட்டது. தற்போது எஃப்.டி. திட்டத்தில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்வதை அதிகரிக்கும் வகையில் எச்.டி.எஃப்.சி வங்கியை தொடர்ந்து எஸ்.பி.ஐ வங்கியும் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.
10 அடிப்படைப் புள்ளிகளை அதிகரித்துள்ளது. எனவே 1 முதல் 2 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு எஃப்.டி. சேமிப்பு திட்டத்தைக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள் தற்போது 5.0% வட்டிக்கு பதிலாக 5.1% வட்டியை பெறுவார்கள். மூத்த குடிமக்களின் எஃப்.டி. கணக்கிற்கு 5.5%-ல் இருந்து 5.6% ஆக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வட்டி நடைமுறை ஜனவரி 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலே குறிப்பிட்ட இரு பிரிவினருக்கு மட்டும் தான் புதிய உயர்வு, மற்றவர்களுக்கு பழைய வட்டியிலேயே கணக்கு தொடரும். இந்தியாவில் எஃப்.டிக்கு அதிக அளவில் வட்டி தரும் வங்கியாக எஸ்.பி.ஐ. உள்ளது. 5 முதல் 10 ஆண்டுகள் வரை எஃப்.டி திட்டம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வட்டி 5.40% ஆக நீடிக்கும்.
கோடாக் மகிந்த்ரா மற்றும் எச்.டி.எஃப்.சி. வங்கிகளிலும் சமீபத்தில் எஃப்.டிக்கான வட்டியானது அதிகரிக்கப்பட்டுள்ளது. 1 முதல் மூன்று ஆண்டுகள் வரை எஃப்.டி. கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இனி 5.20% வட்டியை பெறுவார்கள். அதே போன்று ஐந்து முதல் 10% வரை வட்டி வைத்திருக்கும் நபர்களுக்கு 5.60% வட்டி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil