கூகிள் சுந்தர் பிச்சைக்கு மேலும் ஒரு மகுடம், ஆல்பபெட் நிறுவனத்தில் சி.இ.ஒ பணி

சுந்தர் பிச்சை தலைமை செயல் அதிகாரியாக அறிவிக்கப்பட்ட பின்னர், ஆல்பாபெட் நிறுவனத்தின் பங்குகள் 0.64% உயர்ந்து 1,303 டாலராக விற்கப்பட்டது. 

சுந்தர் பிச்சை தலைமை செயல் அதிகாரியாக அறிவிக்கப்பட்ட பின்னர், ஆல்பாபெட் நிறுவனத்தின் பங்குகள் 0.64% உயர்ந்து 1,303 டாலராக விற்கப்பட்டது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கூகிள் சுந்தர் பிச்சைக்கு மேலும் ஒரு மகுடம், ஆல்பபெட் நிறுவனத்தில் சி.இ.ஒ பணி

Google chief Sundar Pichai to be CEO of Alphabet : கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை, தற்போது கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் (சி.இ.ஓ) நியமிக்கப்பட்டுள்ளார். 21 ஆண்டுகளுக்கு முன்பு  பேஜ், செர்ஜி பிரின் ஆகியோரால் இந்த ஆல்பபெட் நிறுவனம் நிறுவப்பட்டது.

"இவ்வளவு காலமாக  ஆல்பபெட்  நிறுவனத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருப்பது மிகப்பெரிய பாக்கியமாக இருந்தபோதிலும், வரும் காலங்களில் நிர்வாகத்தின் அன்றாட நிகழ்வுகளில் மூக்கை நுழைக்காமல், ஆலோசனைகளையும், அன்பையும் மட்டும் வழங்கயிருக்கின்றோம். நாங்கள் உருவாக்கிய நிறுவனத்திற்கு அன்பை மட்டும் வழங்கும்  ஒரு முதிர்ச்சியான பெற்றோர் வேடம் ஏற்க வேண்டிய நேரம் வந்தவிட்டதாக நாங்கள் கருதுகிறோம்"என்று பேஜ், பிரின் செவ்வாயன்று தங்கள் வலைப்பதிவு இடுகையில் எழுதியுள்ளனர்.

மெரினாவில் நுரை தள்ளியதற்கு அரசு அலட்சியம் காரணமா?

பேஜ் , பிரின் மற்றும் பிச்சய் போன்ற மூவருமே வலைத் தேடல் மற்றும் நுண்ணறிவு மென்பொருளை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர். கூகுள் நிறுவனத்தின்  ப்ரொடக்ட் லீடர் இருந்த சுந்தர் பிச்சை இதுபோன்ற தொழில்நுட்பங்களை  உலகளவில் கிடைக்கச் செய்வதற்கான முயற்சிகளை அதிகரித்தவர்.

 

இருந்தாலும், இவர்களின் தொலைதூரப்  பார்வை பல வகையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.  ஐந்து கண்டங்களில் இருக்கும் முக்கால்வாசி அரசாங்கங்களின் டேட்டா பாதுகாப்பு, தொழிற்முறை போட்டி கொள்கை, அதிகமான வரி போன்ற செயல்பாடுகள் கூகுள் நிறுவனத்துக்கு மிகுந்த அழுத்தத்தையும் கொடுத்தது .

தானியங்கி கார்கள் தொடர்பான தொழில்நுட்பத்தை உருவாக்கும்  வேமோ, சுகாதார பராமரிப்பு மென்பொருள் நிறுவனமான வெர்லி போன்ற ஒரு டஜன் நிறுவனங்களுக்கு சொந்தமானது இந்த ஆல்பாபெட் நிறுவனம்.  கூகிள் நிறுவனத்தின்  மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக 2015 இல் உருவானது.

தொழில்நுட்ப விவரங்களில் பெரிய எதிர்பார்ப்புகளையும் வலுவான எண்ணங்களையும் கொண்டிருப்பதாக அறியப்பட்ட பேஜ், தானியங்கி கார்கள்  போன்ற புதிய வணிகங்களை வளர்ப்பதில் கவனம் செலுத்த விரும்பினார். இருந்தாலும், இந்த முயற்சிகள் அனைத்தும் ஒரு இழப்பை நோக்கியே நகர்ந்தன. இதனால் பேஜ்,  ஆல்பபெட் நிறுவனத்துக்குள் மிகவும் இலாபகரமான இயங்கி வரும் கூகுள் நிறுவனத்தை சுந்தர் பிச்சையின் நிர்வாகத்தின் கீழ் ஒப்படைத்தார்.

பிரின் ஆல்பபெட்டின் தலைவராக இருந்தார், ரோபாட்டிக்ஸ் மற்றும் பிற ஆராய்ச்சி திட்டங்களுக்கு தன்னுடைய நேரங்களை  செலவிட்டார்.

பேஜ் மற்றும் பிரின் நிறுவனத்தின் இயக்குனர்களாக மட்டும் இருப்பார்கள், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் ப்ரெசிடென்ட் பதவிகளை கைவிடுகிறார்கள் என்று ஆல்பாபெட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ப்ரெசிடென்ட்  பணி நிரப்பப்படாது என்று  ஆல்பாபெட் நிறுவனம் கூறியுள்ளது.

சுந்தர் பிச்சை தலைமை செயல் அதிகாரியாக அறிவிக்கப்பட்ட பின்னர், ஆல்பாபெட் நிறுவனத்தின் பங்குகள் 0.64% உயர்ந்து 1,303 டாலராக விற்கப்பட்டது.

Google

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: