கூகுள் பே-வின் வைப்பு நிதி சேவை.. வட்டி எவ்வளவு!

கூகுள் பே முதன்முதலாக ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி மூலமாக ஒரு வருட பிக்ஸட் டெபாசிட்களை வழங்கும் என கூறப்படுகிறது.

Google pay FD, Equitas bank

கூகுள் நிறுவனம் தனது கூகுள் பே செயலி மூலமாக இந்திய வாடிக்கையாளர்களுக்கு எஃப்.டி என்கிற வைப்புநிதி வசதியை வழங்க இருக்கிறது. ஆரம்ப நிலையில் ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்கின் திட்டங்களை மட்டும் அளிக்கிறது. இதில் ஓராண்டு கால முதலீட்டுக்கு அதிகபட்ச வட்டி விகிதம் 6.35% ஆகும்.

ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் சேமிப்புக் கணக்கு இல்லையென்றாலும், கூகுள் பே செயலியின் மூலமாக ஈக்விடாஸ் எஃப்.டி-ல் முதலீடு செய்யலாம் என்பதுதான் இத்திட்டத்தின் சிறப்பம்சம். இந்த வைப்பு நிதி 7-29 நாட்கள், 30-45 நாட்கள், 46-90 நாட்கள், 91-180 நாட்கள், 181-364 நாட்கள் மற்றும் 365 நாட்கள் உட்பட 3.5% முதல் 6.35% வட்டி விகிதங்களை கொண்டிருக்கிறது.

எனவே, கூகுள் பே பயனர்கள் தங்கள் வீடுகளில் இருந்து எளிதாக, பாதுகாப்பான எஃப்.டி.யில் முதலீடு செய்யலாம். வைப்பு நிதி கணக்கின் அசல் மற்றும் வட்டித் தொகை Google Pay பயனரின் தற்போதைய வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும்.

பயனர்கள் ஆதார் கார்டு மற்றும் அதன்மூலம் வழங்கப்படும் ஒருமுறை கடவுச்சொல் மூலம் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். ஃபின்டெக் ஸ்டார்ட்அப் சேது ஒரு அப்ளிகேஷன் புரோகிராமிங் இன்டர்ஃபேஸ் ஸ்டார்ட் அப் ஆகும். நிறுவனம் முன்னதாகவே எஃப்டி-களுக்கு பல்வேறு தளங்களில் சோதனை பதிப்பை உருவாக்கி இருக்கிறது.

ஈக்விடாஸ் வங்கியில் அதிக வட்டியில் பாதுகாப்பான எஃப்டி திறப்பது எப்படி?

உங்கள் Google Pay செயலியைத் திறந்து, ‘Businesses and bills’ என்ற optionக்கு கீழ் உள்ள
ஈக்விடாஸ் SFB லோகோவைக் கிளிக் செய்யவும்.

எக்விடாஸ் பேங்க் ஸ்பாட் வழியாக FD க்கான தொகை மற்றும் காலத்தை தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் தனிப்பட்ட மற்றும் KYC விவரங்களை (PAN எண் & ஆதார் எண்) ஈக்விடாஸ் வங்கிக்கு வழங்கவும்.

Google Pay UPI ஐப் பயன்படுத்தி பணத்தை முதலீடு செய்யவும்.

கூகிள் பே தளத்தில் உள்ள ஈக்விடாஸ் பேங்க் ஸ்பாட்டில் இருந்து பயனாளர்கள் தங்கள் வைப்புத்தொகையை கண்காணிக்கலாம். புதியவற்றைச் சேர்க்கலாம் மற்றும் முன்கூட்டியே திரும்பப் பெறலாம். Google Pay பயனர் முன்கூட்டியே வைப்புத்தொகையை திரும்ப பெற்றால் வருமானம் அதே நாளில் விரைவாக அவர்களின் வங்கிக் கணக்கைச் சென்றடையும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Google pay launches digital fd tie up with equitas small finance bank

Next Story
எல்.பி.ஜி சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு; சென்னையில் சிலிண்டர் விலை எவ்வளவு?Non-subsidised LPG cylinder prices hiked, Non-subsidised LPG cylinder prices hiked Rs 25, how much lpg cylinder cost you now in tamilnadu, சிலிண்டர் விலை உயர்வு, மானியம் இல்லாத சிலிண்டர் விலை உயர்வு, மானியம் இல்லாத சிலிண்டர் விலை ரூ 25 உயர்வு, சென்னையில் சிலிண்டர் விலை எவ்வளவு, தமிழ்நாடு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, how much cylinder pirce in chennai, LPG cylinder prices hiked, OMC announced LPG cylinder prices hiked, LPG cylinder prices hiked in india
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express