அடிக்கடி கூகுள் பே யூஸ் பண்றீங்களா? வங்கிகள் உங்களை எச்சரிக்கிறது.

கூகுள் பே நிறுவனம் ஒரே மாதத்தில் 14 சதவீதம் உயர்ந்துள்ளது.

google pay download : டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் பேடிஎம், போன் பெ நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி, கூகுள் பே முதலிடத்துக்கு வந்துள்ளது அனைவரும் அறிந்த ஒன்று.

இந்தியாவில் கூகுள் நிறுவனம் தனது டிஜிட்டல் பணபரிவர்த்தனை சேவையை கடந்த 2017ம் ஆண்டு தொடங்கியது. கிட்டதட்ட 20 மாதங்களே ஆன நிலையில், தற்போது அதிகம் பணப்பரிவர்த்தனை செய்யப்படும் நம்பர் ஒன் இடத்தில் கூகுள் பே உள்ளது.

ஏப்ரல் மாத தரவுகளின்படி, சுமார் 49 ஆயிரத்து 700 கோடி ரூபாய் கூகுள் பே மூலம் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. போன் பெ நிறுவனம் 42 ஆயிரத்து 610 கோடி ரூபாய்க்கு பணிபரிமாற்றம் செய்து இரண்டாம் இடத்திலும், பேடிஎம் நிறுவனம் 35 ஆயிரத்து 500 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை செய்து மூன்றாம் இடத்திலும் உள்ளது.

ஒட்டு மொத்தமாக பார்க்க போனால், முன்னனி நிறுவனங்களாக இருக்கும் கூகுள் பே, பேடிஎம், போன் பெ ஆகியவற்றின் மூலம் 1.42 லட்சம் கோடி ரூபாய்க்கு பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு உருவாக்கியுள்ள ‘பீம்’ BHIM ஆப் மூலம் 6 ஆயிரத்து 600 கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இந்த தரவுகளின் அடிப்படையில், கூகுள் பே நிறுவனம் ஒரே மாதத்தில் 14 சதவீதம் உயர்ந்துள்ளது.

பயனாளர்களின் விமர்சனபடி, பேடிஎம், கூகுள் பே, போன் பெ ஆகிய மூன்றி கூகுள் பே ஆப் பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதாகவும், ப்ரோமோ, கேஷ்பேக் ஆபர்கள் அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, உணவு விடுதி, டிரவல்ஸ், திரையரங்கு, டிக்கெட், முதலீடு என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆன்லைன் வர்த்தகத்தில் கூகுள் பே உள்ளது.

எஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி!

அதே நேரம் அடிக்கடி கூகுள் பே பயன்படுத்துபவர்கள் தங்களது அக்கவுண்ட் பாதுகாப்பு தன்மையை சரிசெய்துக் கொள்ளும் படி வங்கிகள் எச்சரித்துள்ளனர். கூகுள் பேயில் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் சேமிப்பு கணக்கு அல்லது கரண்ட் அக்கவுண்ட் எதுவானாலும், அது எந்த வங்கியை சேர்ந்ததாக இருந்தாலும் அடிக்கடி பாஸ்வேர்ட்டை மாற்றி பயன்படுத்துமாறு வங்கிகள் அறிவுருத்தியுள்ளனர்.

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close