government pension government staff pension: விருப்ப ஓய்வு அல்லது பணி நிறைவு ஓய்வு பெறவுள்ள அரசு ஊழியர்கள் கவனத்திற்கு தான் இந்த தகவல். உங்களுக்கு மத்திய அரசிடம் கிடைக்க போகும் பலன்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.
Advertisment
அரசு ஊழியர்கள் முதலில் ஓய்வுபெறும் நாளிலிருந்து 6 மாதங்கள் வரையிலோ அல்லது தவிர்க்க முடியாத பட்சத்தில் ஓராண்டு வரையிலோ தற்காலிக ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பணிநிறைவு ஓய்வு மட்டுமல்லாமல் விருப்ப ஓய்வு பெறுபவர்கள் மற்றும் அடிப்படை விதி 56இன் கீழ் ஓய்வு பெறுவோருக்கும் இந்த நடைமுறைகள் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுக்குறித்து மத்தியப் பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சரான ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ஓராண்டு வரையிலோ தற்காலிக ஓய்வூதியம் வழங்கப்படும் . கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் அன்றைய நாளே அவர்களுக்கான ஓய்வூதியப் பட்டுவாடா ஆணையை சம்பந்தப்பட்ட பணியாளருக்கு தாமதமின்றி வழங்குவதற்கு ஏதுவாக ஓய்வூதியங்கள் துறை மேம்படுத்தப்பட்டிருக்கிறது. ஓய்வுபெறும் சில ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பட்டுவாடா ஆணையை வழங்க முடியவில்லை. எனவே, இதில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்கும் வகையில் வழக்கமான ஓய்வூதியப் பட்டுவாடா ஆணை பிறப்பிக்கப்படும் வரை தற்காலிக ஓய்வூதியம் வழங்கப்படும்.