ஒடிசா விபத்து: விமானக் கட்டண உயர்வு கூடாது; கண்காணிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

ஒடிசா விமான நிலையங்களில் கட்டண உயர்வை கண்காணிக்க விமான நிறுவனங்களுக்கு மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ஒடிசா விமான நிலையங்களில் கட்டண உயர்வை கண்காணிக்க விமான நிறுவனங்களுக்கு மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Odisha flights

Odisha flights

ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே கடந்த வெள்ளிக்கிழமை (ஜுன் 2) கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு கோர விபத்து ஏற்பட்டது. இதில் பலியானோர் எண்ணிக்கை 294 ஆக உயர்ந்துள்ளது. 1000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். நகரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்று வருகின்றனர். இந்த ரயில் விபத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்நிலையில் அங்கு மீட்பு பணிகள் முடிவடைந்து வருகிறது. விபத்துக்குள்ளான ரயிலில் பயணம் செய்த தங்கள் உறவினர்களைக் காண பல்வேறு ஊர்களில் இருந்தும் மக்கள் ஒடிசா செல்கின்றனர்.

இந்நிலையில் ஒடிசாவில் உள்ள புவனேஸ்வர் மற்றும் பிற விமான நிலையங்களில் இருந்து செல்லக் கூடிய மற்றும் இங்கு வரக் கூடிய விமானங்களுக்கான கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்றும் திடீர் கட்டண உயர்வு காணப்பட்டால் அவற்றை கண்காணிக்கும்படி விமான நிறுவனங்களுக்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisment
Advertisements

அதேபோன்று ரயில் விபத்து எதிரொலியாக விமான பயண ரத்து செய்யும் போதும் மற்றும் மறு காலஅட்டவணையை தேர்ந்தெடுப்பதற்கும் நிறுவனங்கள் அபராத தொகை எதுவும் விதிக்காமல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Train Odisha

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: