/tamil-ie/media/media_files/uploads/2018/12/cats-22.jpg)
பெண் ஊழியர்கள் குடும்ப ஓய்வூதியத்திற்கு மகன் அல்லது மகளை பரிந்துரைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
pension-scheme | பெண் ஊழியர்கள் தனது கணவருக்கு பதிலாக தனது மகன் அல்லது மகளை குடும்ப ஓய்வூதியத்திற்கு பரிந்துரைக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.
முன்பு, அரசு ஊழியர் இறந்தால், ஓய்வூதியதாரரின் மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இது குறித்து, மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், “பெண் அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வூதியம் பெறுவோர் தகுதியுடையோருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க அனுமதிக்கும் வகையில், 2021 ஆம் ஆண்டு மத்திய சிவில் சேவைகள் (ஓய்வூதிய) விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி, “பெண் ஊழியர்கள் தனது கணவருக்கு பதிலாக தனது மகன் அல்லது மகளை குடும்ப ஓய்வூதியத்திற்கு பரிந்துரைக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது” என்றார்.
மேலும், “திருமண முரண்பாடுகள் விவாகரத்து நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் அல்லது குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், வரதட்சணைத் தடைச் சட்டம் அல்லது இந்திய தண்டனைச் சட்டம் போன்ற சட்டங்களின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளுக்கு இந்தத் திருத்தம் தீர்வு காணும்” என்றார்.
தொடர்ந்து, “நீண்ட கால சமூக-பொருளாதார தாக்கம் மற்றும் பெண்களுக்கு சமமான உரிமைகளை வழங்குவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைக்கு இணங்க, அரசாங்கம் நீண்டகாலமாக நிறுவப்பட்ட விதியை திருத்தியுள்ளது.
இதனால், இதுவரை நடைமுறையில் உள்ள அவரது கணவருக்கு பதிலாக குடும்ப ஓய்வூதியத்திற்காக மகன் அல்லது மகள் தகுதி பெறுவார்கள்” என்றார்.
இந்தப் புதிய விதிகளின்படி ஒரு பெண் ஊழியர் வீட்டில் பணிக்கு செல்ல இயலாத குழந்தையை கொண்ட விதவை இருந்தால் அவர் ஓய்வூதிய பலன்களை அனுபவிக்க முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.