Advertisment

சிறு சேமிப்பு வட்டி திருத்தம் எப்போது? புதிய தகவல்

Small Savings Schemes: மத்திய அரசின் கிஷான் விகாஸ் பத்ரா முதலீடுகள் உங்கள் பணத்தை 115 மாதங்களில் இரட்டிப்பு ஆக்க வல்லவை. தற்போது, சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் 4 சதவீதம் (அஞ்சல் அலுவலக சேமிப்பு வைப்பு) மற்றும் 8.2 சதவீதமாக உள்ளன.

author-image
WebDesk
New Update
The Latest Fixed Deposit Interest Rates

Small Savings Schemes: மத்திய அரசு சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டியை ஒவ்வொரு காலாண்டும் திருத்தும்.

Small Savings Schemes:  பி.பி.எஃப், தேசிய சேமிப்பு சான்றிதழ், கிஷான் விகாஸ் பத்ரா உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.
அக்டோபர்-டிசம்பர் 2023க்கான வட்டி விகிதங்கள் இம்மாத இறுதியில் செப்டம்பர் 29 அல்லது  30ஆம் தேதிகளில் திருத்தப்படுகின்றன.

Advertisment

வட்டி திருத்தம்

பொதுவாக இந்தத் திட்டங்களின் (சிறு சேமிப்பு திட்டங்கள்) வட்டி விகிதங்கள் முந்தைய காலாண்டின் ஜி-செக் (அரசு பத்திரங்கள்) வருமானத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.
இதனால் அக்டோபர்-டிசம்பர் 2023க்கான வட்டி விகிதங்கள் மாற்றப்பட வாய்ப்பில்லை என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தற்போது, சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் 4 சதவீதம் (அஞ்சல் அலுவலக சேமிப்பு வைப்பு) மற்றும் 8.2 சதவீதமாக உள்ளன.

சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள்

  • சேமிப்பு கணக்கு 4 சதவீதம்
  • 1-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்கள் (FD): 6.9 சதவீதம்
  • 2-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்கள்: 7.0 சதவீதம்
  • 3-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்கள்: 7 சதவீதம்
  • 5-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்கள்: 7.5 சதவீதம்
  • 5-ஆண்டு தொடர் வைப்புத்தொகை (RD): 6.5 சதவீதம்
  • தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் (NSC): 7.7 சதவீதம்
  • கிசான் விகாஸ் பத்ரா: 7.5 சதவீதம் (115 மாதங்களில் இரட்டிபு)
  • பொது வருங்கால வைப்பு நிதி: 7.1 சதவீதம்
  • சுகன்யா சம்ரித்தி கணக்கு: 8.0 சதவீதம்
  • மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: 8.2 சதவீதம்
  • மாத வருமானக் கணக்கு: 7.4 சதவீதம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

FD RD
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment