சிறு-குறுந்தொழில் செய்பவர்கள் தங்கள் ஜிஎஸ்டி - எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தால் அவர்களுக்கு சலுகைகள் அளிக்கப்படும். இது தொடர்பாக நிதி அமைச்சகத்தில் இருந்து அலுவல் ரீதியான தகவல்கள் சில நாட்களில் வெளியாகும் என MSME செக்ரட்டரி ஏகே பண்டா கூறினார்.
சிறுங்குறுந்தொழில் முனைவோர்கள் அரசின் பல்வேறு சலுகைகளை பெற ஆதார் எண்ணை தங்களின் ஜிஎஸ்டி எண்ணுடன் இணைப்பது கட்டாயமாகிறது.
மிக விரைவில் இது தொடர்பாக தொழில் முனைவோர்களுக்கு நிதி அமைச்சகம் மூலம் கடிதங்கள் அனுப்பபடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
MSMEயில் தங்களுடைய தகவல்களை இணைக்கும் போது அத்துடன் ஆதார் மற்றும் ஜிஎஸ்டி எண்ணை இணைத்தால் அவர்களுக்கு எந்த மாதிரியான சலுகைகளை அளிக்கலாம் என்று மத்திய அரசு முடிவு செய்யும் என்றும் கூறாப்பட்டிருக்கிறது.
தொழில் முனைவோர்களின் விருப்பம் இல்லாமல் அவர்களின் தகவல்களை பெற இயலாது என்பது எங்களுக்கு தெரியும் என்று MSME செக்ரட்டரி ஏகே பண்டா கூறினார்.
தொழில் முனைவோர்கள் தங்களின் விருப்பம் இருந்தால் மட்டுமே ஆதார் எண்ணை இணைக்கட்டும். ஆதாரை இணைத்தால் அதனால் நன்மைகள் கிடைக்கும் என்று நாங்கள் ஆலோசனைகள் மட்டுமே வழங்குகிறோம். அது கட்டாயம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.