பி.ரஹ்மான் கோவை மாவட்டம்
Coimbatore News in Tamil: கோவை ஈரோடு சேலம் நாமக்கல் உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் இந்த ஆண்டு தீபாவளியை குதூகலமாய் கொண்டாட ஈரோடு சித்தோடு பகுதியில் டெக்ஸ்வேலி கோலாகல தீபாவளி கொண்டாட்டம் எனும் மெகா ஷாப்பிங் கண்காட்சி.
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே பெங்களூரு கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20 லட்சம் சதுர அடியில் மிகப்பிரம்மாண்டமாய் அமைந்துள்ளது டெக்ஸ்வேலி. தென்னிந்திய அளவில் ஜவுளித்துறை சார்ந்த பல்வேறு கண்காட்சிகளை நடத்தியுள்ள டெக்ஸ்வேலி நிர்வாகம் கொரோனா கால சில வருட இடைவெளிக்கு பிறகு, இந்த தீபாவளி பண்டிகை முன்னிட்டு மிகப்பெரிய கொண்டாட்டமாக மெகா ஷாப்பிங் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
தீபாவளிக்கு டெக்ஸ்வேலி எனும் இந்த மெகா கண்காட்சி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. அக்டோபர் 12 முதல் 25 ஆம் தேதி வரை மெகா தீபாவளி பஜார் என்ற பிரம்மாண்டமான தீபாவளி விற்பனை கண்காட்சியில் 140க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைத்துள்ளதாகவும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை இங்கு எதிர்பார்ப்பதாகவும் டெக்ஸ்வேலி நிர்வாகத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த ஷாப்பிங் கண்காட்சி குடும்பத்தில் உள்ள அனைவரையும் கவரும் வகையில் வீட்டு உபயோகப்பொருட்கள் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கார்கள் மோட்டார் சைக்கிள்களின் அணிவகுப்பு டாட்டூஸ் அழகுநிலையங்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை மகிழ்விக்க 50,000 சதுர அடி பரப்பளவில் பிரத்யேக வேடிக்கை விளையாட்டு மையம் (Fun Zone), 25க்கும் மேற்பட்ட சுவையான உணவகங்களுடன் கூடிய உணவு திருவிழா என வாடிக்கையாளர்கள் பயன் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக பொழுது போக்கு அம்சங்களாக, இந்த கண்காட்சியில் அக்டோபர் 14,15,16 ஆகிய நாட்களில் பிரபல சின்னத்திரை கலைஞர்கள் பங்குபெறும் ஸ்டார் ஷோ நிகழ்வுகளும் 20 ம் தேதி சங்கமம் என்ற தமிழ் கலாசார திருவிழாவும் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் ஸ்லோகன் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெரும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பிரம்மாண்ட பரிசுகளும் வழங்க உள்ளதாக டெக்ஸ்வேலி துணைத்தலைவர் தேவராஜன் நிர்வாக இயக்குனர் ராஜசேகர் செயல் இயக்குனர் குமார் மற்றும் தலைமை செயல் அதிகாரி சிலாஸ் பால் ஆகியோர் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil