GST annual returns submission date extended till November 30 : ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்ய, மத்திய நிதி அமைச்சகம் கால அவகாசம் வழங்கியுள்ளது. ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்யும் போது ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த கால அவகாசத்தை நிதி அமைச்கம் வழங்கியுள்ளது.
எனவே ஆகஸ்ட் 31-ம் தேதி ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய விதிக்கப்பட்டிருந்த கடைசி தேதி நவம்பர் 30-ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பல்வேற்பட்ட வரி விதிப்பு முறைகளின் கீழ் சப்ளை விவரங்களைப் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். ஜூலை 1, 2017 முதல் மார்ச் 31, 2018 வரையிலான வரிக் கணக்கை தாக்கல் செய்த போது தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டிருந்தது.
GSTR-9C என்பது 2 கோடி ரூபாய்க்கும் அதிகப்படியான ஆண்டு வருமானம் பெறுவோர் செலுத்த வேண்டிய வரி ஆகும். ஜிஎஸ்டி-யின் கம்போசிஷன் என்னும் எளிமையான வரி செலுத்தும் முறையை தேர்ந்தெடுத்திருப்போர் GSTR-9A கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
ஆண்டுதோறும் ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் வரி செலுத்துவோர் GSTR 9 மூலம் வரி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : பொதுத்துறை வங்கிகளின் இணைப்புகளை எவ்வாறு புரிந்துகொள்வது?