scorecardresearch

ஏப்ரல் ஜி.எஸ்.டி வசூல் ரூ1.87 லட்சம் கோடியாக அதிகரிப்பு; இதுவரையிலான வசூலில் உச்சம்

ஏப்ரம் மாதம் ரூ.1,87,035 கோடி ஜி.எஸ்.டி வசூல்; 2017 ஜூலையில் இருந்து இதுவரையிலான ஒரு மாத வசூலில் இதுவே அதிகம்

How to claim unclaimed money from bank SA and FDs
இந்திய ரிசர்வ் வங்கி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களால் தொடங்கப்பட்ட பரிவர்த்தனைகள் இல்லாத கணக்குகளை அடையாளம் காணுமாறு வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) வருவாய் வசூல் ஏப்ரல் மாதத்தில் 12 சதவீதம் அதிகரித்து ரூ.1.87 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஜூலை 2017 இல் மறைமுக வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்த பிறகு, இது ஒரு மாதத்தில் வசூலான அதிகபட்ச வருவாய் ஆகும்.

நிதியமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்த மாதம் வசூலான ரூ.1,87,035 கோடியின் பிரிவு பின்வருமாறு: சி.ஜி.எஸ்.டி ரூ.38,440 கோடி, எஸ்.ஜி.எஸ்.டி ரூ.47,412 கோடி, ஐ.ஜி.எஸ்.டி ரூ.89,158 கோடி (பொருட்கள் இறக்குமதியில் வசூலான ரூ.34,972 கோடி உட்பட) மற்றும் செஸ் 12,025 கோடி ரூபாய்.

இதையும் படியுங்கள்: லேட்டஸ்ட் எஃப்.டி வட்டி விகிதங்கள்; எஸ்.பி.ஐ, ஐ.சி.ஐ.சி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி., செக் பண்ணுங்க

உள்நாட்டு பரிவர்த்தனைகளின் (சேவைகளின் இறக்குமதி உட்பட) வருமானம் கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்த ஆதாரங்களில் இருந்து வந்த வருமானத்தை விட இந்த ஏப்ரல் மாதத்தில் 16 சதவீதம் அதிகம் என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

2022-23 நிதியாண்டின் ஒட்டுமொத்த வசூல் ரூ.18.10 லட்சம் கோடியாக இருந்தது, இது முந்தைய ஆண்டை விட 22 சதவீதம் அதிகமாகும்.

இதற்கு முன்பு, கடந்த ஆண்டு ஏப்ரலில் அதிகபட்சமாக ரூ.1.68 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வசூலானது.

முன்னதாக, மார்ச் 2023க்கான ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.60 லட்சம் கோடியாக இருந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Gst collection rises 12 pc to rs 1 87 lakh cr in april highest ever collection