ஆன்லைனில் மட்டும் ரூ. 40 லட்சம் வருமானம்: பானி பூரி வியாபாரிக்கு ஜி.எஸ்.டி நோட்டீஸ்

தமிழ்நாட்டில் பானிபூரி கடை வைத்துள்ள வியாபாரிக்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பானிபூரி கடை வைத்துள்ள வியாபாரிக்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
pani pur

ஆன்லைன் வர்த்தகத்தில் மட்டும் ஓர் ஆண்டில் ரூ.40 லட்சம் வருமானம் ஈட்டி உள்ள நிலையில், தமிழ்நாட்டில் பானிபூரி கடை வைத்துள்ள ஒரு வியாபாரிக்கு மத்திய அரசின்  ஜி.எஸ்.டி நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. அந்த நோட்டீஸ், இப்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 

Advertisment

டிசம்பர் 17, 2024 தேதியிட்ட அந்த நோட்டீஸில், ‘தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி பிரிவு 70-ன் கீழ், நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களை சமர்ப்பியுங்கள்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆண்டு வருமானம் ரூ.40 லட்சத்தை தாண்டுவதால் அதற்கான வர்த்தகங்களுக்கு ஜி.எஸ்.டி வரி பதிவு கட்டாயம். 

2023 - 24 ம் ஆண்டில் மட்டும் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம், ரேசர் பே மற்றும் ஃபோன் பே மூலம்  இந்தப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

Advertisment
Advertisements

இருப்பினும், இந்த நோட்டீஸ் எந்தளவுக்கு உண்மையானது, அந்த பானிபூரி கடைக்காரர் தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் கடை வைத்திருக்கிறார் என்பது பற்றி எந்த விவரமும் அந்த நோட்டீஸில் இல்லை.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: