ஜிஎஸ்டி அமைப்பில் அதிரடி மாற்றங்கள்? அமைச்சர்கள் குழுவை உருவாக்கிய நிதித்துறை அமைச்சகம்

துணை முதலமைச்சர் அஜித் பவார் தலைமையிலான அமைச்சர்கள் குழு ஜிஎஸ்டி அமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சர்கள் குழு, ஜிஎஸ்டி வரி விகிதம் மாற்றி அமைக்க அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது அமலில் உள்ள ஜிஎஸ்டி வரி படிநிலை குறித்து ஆராயப்பட்டதை தொடர்ந்து, ஜிஎஸ்டி அமைப்பில் சீர்திருத்தம் மேற்கொள்வதற்காக 2 அமைச்சர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

வரி கட்டமைப்பிற்குள் “சிறப்பு விகிதங்களை” மதிப்பீடு செய்வது, விகித கட்டமைப்பை எளிதாக்குவது, வரி விகித அடுக்குகளை ஒன்றிணைத்தல், வருவாயை அதிகரிக்க ஏய்ப்புக்கான சாத்தியமான ஆதாரங்களை அடையாளம் காணுதல் ஆகியவை இக்குழுக்களின் பொறுப்புகளாகும்.

இதற்காக, மத்திய நிதித்துறை அமைச்சகம் இரண்டு அமைச்சர்கள் அடங்கிய குழுவை உருவாக்கியுள்ளது. மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் தலைமையிலான அமைச்சர்கள் குழு ஜிஎஸ்டி அமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சர்கள் குழு, ஜிஎஸ்டி வரி விகிதத்தை மாற்றி அமைக்க உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சர்கள் குழுவானது, செப் 17 அன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் மீட்டிங்கில் வரிபடிநிலை ஆய்வறிக்கை சேர்க்கப்படாததை தொடர்ந்து அமைக்கப்பட்டுள்ளது. தேசிய வருவாயை காட்டிலும் ஜிஎஸ்டி வருவாய் அதிகரிப்பது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி சனிக்கிழமை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், தற்போது இருக்கும் வரி படிநிலை நிலை குறித்து அமைச்சர்கள் குழு ஆராய உள்ளது. தற்போது ஐந்து படிநிலைகளில் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தப் வரி படி நிலைகளை ஒன்றிணைப்பது குறித்தும் அமைச்சர்கள் குழு ஆராய உள்ளது.

வரி விகிதம் பகுப்பாய்வு குழுவினர், சிறப்பு விகிதங்களையும் சேர்த்து ஜிஎஸ்டியின் தற்போதைய விகித படிநிலை கட்டமைப்பையும், ஜிஎஸ்டியில் எளிமையான விகித அமைப்பிற்கு தேவையான வரி விகித படிநிலையை இணைப்பது உட்பட வரி விகிதத்தை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைபார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டிய மாற்றங்களையும், குறுகிய மற்றும் நடுத்தர காலங்களில் செயல்படுத்தப்பட வேண்டிய மாற்றங்களுக்கான நடைமுறை வரைபடத்தையும் அமைச்சர்கள் குழு பரிந்துரைக்கலாம்” என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த குழு உடனடி நடவடிக்கைகளுக்கு இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்கலாம். முழுமையான அறிக்கையை இரண்டு மாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

வரி விகிதம் மாற்றி அமைக்கும் குழுவில் பிகார் துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத், கோவாவின் போக்குவரத்து மற்றும் சட்டமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் மவுவின் கோடின்ஹோ, கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால், ராஜஸ்தானின் சட்டம் மற்றும் சட்ட விவகாரங்களுக்கான அமைச்சர் சாந்தி குமார் தரிவால், உத்தரபிரதேச நிதியமைச்சர் சுரேஷ்குமார் கன்னா, மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா ஆகியோர் உள்ளனர்.

ஜிஎஸ்டி சீர்திருத்தம் குழுவானது, வரி அலுவலர்களிடம் இருக்கும் தகவல் தொழில்நுட்ப கருவிகள் குறித்து ஆய்வு செய்வது, அமைப்பை வலுப்படுத்தவும், தொழில் செயல்பாடுகளில் மாற்றம் மேற்கொள்ளவும் பரிந்துரை வழங்குவது, வரி ஏய்ப்பு நடைபெறுவதற்கான வழிகளை கண்டறிவது, வருவாய் கசிவை தடுக்க மாற்றங்களை பரிந்துரைப்பது ஆகியன இக்குழுவின் பொறுப்பாகும்.

இதுபோக, வரி இணக்கத்தை மேம்படுத்த தகவல் பகுப்பாய்வை எப்படி பயன்படுத்தலாம் என்பதை கண்டறிவது, மத்திய மற்றும் மாநில வரி நிர்வாகங்கள் இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்த வழிகளை கண்டறிவது ஆகியவையும் இக்குழுவின் பொறுப்புகளாகும்.

ஜிஎஸ்டி சீர்திருத்த குழுவில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் , தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதலா, ஆந்திர பிரதேச நிதியமைச்சர் புக்கனா ராஜேந்திரநாத், அசாம் நிதியமைச்சர் அஜந்தா நியோக், சத்தீஸ்கர் வணிக வரித் துறை அமைச்சர் டி.எஸ்.சிங் டியோ, ஒடிசா நிதியமைச்சர் நிரஞ்சன் புஜாரி ஆகியோர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Gst panels constituted focus on tax slab review

Next Story
‘ஒரு லிங்க் வந்தது… ஓபன் செய்தேன்… பணம் போச்சு!’ SBI வாடிக்கையாளர்கள் உஷார்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X