ஜிஎஸ்டி விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் 2

**ஜிஎஸ்டி சட்டத்தின்படி கணக்கு புத்தகங்கள், மற்ற ஆவணங்களை வருடாந்திர ரிட்டர்ன் தாக்கல் செய்த பிறகு வருகிற 60 மாதங்கள் வரை வைத்திருக்க வேண்டும். **வரி வசூலித்த பிறகு, அந்த வரியை அரசுக்கு செலுத்தாமல் இருந்தால், பல கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு, வியாபாரியின் சொத்தின்மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. **ஒரு வியாபாரியிடம் கணக்கிற்கு மேல் பொருட்கள் இருந்தால் அதை பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சட்டத்தின்படி மற்ற அரசு அதிகாரிகளும் ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு […]

**ஜிஎஸ்டி சட்டத்தின்படி கணக்கு புத்தகங்கள், மற்ற ஆவணங்களை வருடாந்திர ரிட்டர்ன் தாக்கல் செய்த பிறகு வருகிற 60 மாதங்கள் வரை வைத்திருக்க வேண்டும்.

**வரி வசூலித்த பிறகு, அந்த வரியை அரசுக்கு செலுத்தாமல் இருந்தால், பல கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு, வியாபாரியின் சொத்தின்மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.

**ஒரு வியாபாரியிடம் கணக்கிற்கு மேல் பொருட்கள் இருந்தால் அதை பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சட்டத்தின்படி மற்ற அரசு அதிகாரிகளும் ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு உதவ அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை மீறுபவர்கள் மீது அதிகபட்சம் ரூ.25000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

**சிறிய தவறுகளுக்கும், ரிட்டர்னில் தவறுதலாக என்ட்ரி செய்திருந்தாலும் அபராதம் விதிக்க தடை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ 5000 வரை தவறு இருந்தால் திருத்திக்கொள்ள அபராதம் இல்லாமல் அனுமதிக்கப்படுகிறது.

**ஆவணங்கள் இல்லாமல் பொருட்களை கொண்டு செல்லும் போது வழியில் அதிகாரிகள் சோதனை செய்தால் உரிமையாளர் தானே முன்வந்து வரி மற்றும் 100 சதவீதம் அபராதம் செலுத்தினால் வண்டியும், பொருட்களும் விடுவிக்கப்படும். இல்லாவிட்டால் வரியும், பொருட்களின் மதிப்பில் 50 சதவீதம் செலுத்திய பிறகு வண்டியும், பொருட்களும் விடுவிக்கப்படும்.

** கூட்டு வியாபாரங்களில் இருந்து ஏதாவது ஒருவர் விலகுவதாக இருந்தால் 30 நாட்களுக்குள் கடிதம் மூலம் ஆணையருக்கு தெரியப்படுத்த வேண்டும். கூட்டு வியாபாரங்களில் கூட்டாளி மாற்றம் உள்ளிட்ட ஏதாவது மாற்றம் இருந்தாலும் அதனை தெரியப்படுத்தி புதிதாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

**நாம் பில்லில் தெரிவிக்கும் விலையின் மதிப்பு குறைவாக இருப்பதாக ஆணையர் கருதினால் நமது கணக்கு புத்தகங்களை வேறு தணிக்கையாளரிடம் கொடுத்து தணிக்கை செய்ய ஆணையருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான செலவை நாம் கொடுக்க வேண்டும்.

**ஒரு மாதத்தில் ஒரு சலான் மூலம் ரூ.10,000 வரையே ரொக்கம், காசோலை, அல்லது வரைவோலை மூலம் வரி செலுத்த முடியும். அதற்கு மேல் எதுவும் செலுத்தவேண்டி இருந்ததால் ஆன்லைன் மூலமாகவே, கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலமே செலுத்த வேண்டும்.

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Gst rules and regulations

Next Story
ஜிஎஸ்டி அறிமுக விழா: காங்., திமுக புறக்கணிப்புelection 2019
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express