New GST rule for foods in tamil: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 47வது பொதுக்கூட்டம் சண்டிகரில் நேற்று செவ்வாய்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்து வரும் இந்த கூட்டத்தில் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு மற்றும் தற்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ள சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விதிப்பது போன்ற விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பல்வேறு உணவு பொருட்களுக்கும் ஜிஎஸ்டி கட்டணம் அதிகரிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவி வருகின்றது.
எந்தெந்த உணவுப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி அதிகரிப்பு?

உணவுப்பொருட்களில் பேக் செய்யப்பட்ட மற்றும் பெயரிடப்பட்ட இறைச்சி (உறைந்த பொருட்கள் தவிர) என அனைத்துக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது. இதில் மீன், தயிர், தேன், கோதுமை மற்றும் மெஸ்லின் மாவு, வெல்லம், அரிசி (Muri) மற்றும் பிற தானியங்கள் உள்ளிட்ட பொருட்களும் அடங்கும். முழுமையான பட்டியல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவால் இறைச்சி, பால், தயிர், பன்னீர், தேன், பிரெட் வகைகள், மாவு வகைகள், மீன்கள் என பல்வேறு உணவுப்பொருட்களின் விலையும், அவை சார்ந்த பொருட்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவற்றுடன் பேக் செய்யப்பட்ட பொருட்கள் என்று கூறப்பட்டுள்ள நிலையில், அதில் இன்னும் எந்தெந்த உணவுப்பொருட்கள் சேர்க்கப்பட உள்ளன என்பது குறித்து கேள்விகள் எழுத்துள்ளன.
பொதுமக்கள் அவதி
நாட்டில் ஏற்கனவே பணவீக்கம் உச்சத்தில் இருந்து வரும் நிலையில், தற்போது அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும், பிற அத்தியாவசியத் தேவைகளுக்கும் வரி விதிக்கப்பட்ட உள்ளது. இதனால் சந்தையில் விலைவாசி உயர்வு கடுமையாக இருக்கும். இது பொதுமக்களை அதிகம் பாதிக்கும்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil