அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் நல்ல லாபம் மற்றும் உறுதியான வருவாய் தரக்கூடிய திட்டங்களாக உள்ளது. அப்படிபட்ட மாத வருவாய் தரக்கூடிய திட்டம் தான் இந்த அஞ்சலக சிறுசேமிப்பு திட்டம்.
அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டம்(தனிநபர் மற்றும் கூட்டு சேமிப்பு கணக்கு)
ஒரு தனிநபர் இந்த திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கி 1000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 4.5லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யலாம். கூட்டு அஞ்சலக கணக்காக இருந்தால் அதிகபட்சமாக 9 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யலாம். கூட்டு கணக்கு வைத்திருப்பவர்கள் செய்யும் முதலீடு அவர்களுக்கு சமமான பங்கு இருப்பதாக கருதப்படும்.
மாதந்தோறும் ரூ.4950 வருவாய் பெறுவது எப்படி?
ஏப்ரல் 1 2020ல் இருந்து அஞ்சலக மாத வருவாய் திட்டத்தின் வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.6 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதாவது நீங்கள் தனிநபர் கணக்கு வைத்திருப்பவர் என்றால் ரூ.4.5 லட்சத்தை முதலீடு செய்வதன் மூலம் ஆண்டிற்கு ரூ.29,700 வட்டியாக பெற முடியும். இதுவே கூட்டு கணக்கு என்றால் ரூ.9 லட்சத்தை முதலீடு செய்வதன் மூலம் ஆண்டிற்கு ரூ.59,400 வட்டியாக பெற முடியும். இதை நீங்கள் மாதாந்திர வருமானமாக கணக்கிடும்போது நீங்கள் செய்த முதலீடுக்கு மாதந்தோறும் ரூ.4,950 மாத வருமானம் கிடைக்கும்.
போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருவாய் திட்டத்தின் வட்டி
அஞ்சல் கணக்கு தொடங்கிய தேதியிலிருந்து ஒரு மாதம் நிறைவு பெற்ற பிறகு வட்டி வழங்கப்படும். அதேபோல அந்த முதலீட்டுத் தொகை முதிர்ச்சி அடையும் வரை இந்த வட்டித்தொகை வழங்கப்படும். மாதந்தோறும் கணக்கில் சேரும் வட்டித்தொகையை எடுக்காவிட்டாலும் வட்டி தொகைக்கு கூடுதல் வட்டி வழங்கப்படாது. இந்த திட்டத்தின் கீழ் கூடுதலாக செலுத்தப்படும் வைப்புத்தொகைக்கு சாதாரண அஞ்சல் சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தின் அடிப்படையிலேயே வட்டி வழங்கப்படும்.
யாரெல்லாம் இந்த திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க முடியும்
18 வயது நிரம்பிய எவரும் இந்த திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க முடியும். இதுவே கூட்டு கணக்கு என்றால் அதிகபட்சமாக மூன்று பேர் வரை இணைந்து கணக்கு தொடங்கலாம் .குழந்தைகள் மற்றும் தெளிவற்ற மனம் கொண்டவர்கள் என்றால் பாதுகாவலர் ஒருவர் துணையுடன் கணக்கு தொடங்கலாம்.
மாதந்திர வருவாய்த் திட்டத்திற்கான வரி
இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் வட்டித்தொகை நம் அஞ்சலக கணக்கிலேயே வரவு வைக்கப்படும். மேலும் இந்த வட்டி தொகை நம் கைக்கு வரும்போது வரி விதிப்புக்கு உள்ளாகும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil