SBI News: உங்க பேங்கில் அதிகாரி சரி இல்லையா? புகார் பதிவு செய்வது எப்படி?

யோனோ இயங்குதளத்தைப் (Yono platform) பயன்படுத்தி ‘எஸ்பிஐ இன்ஸ்டா சேமிப்பு வங்கிக் கணக்கு’ திறக்கலாம்.

SBI Yono platform
எஸ்பிஐ

எஸ்பிஐ வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும் என்பது பாரம்பரியமிக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது. தற்போது எஸ்பிஐ வங்கியில் ஆன்லைனில் சேமிப்பு தொடங்கும் வசதி மீண்டும் தொடங்கப்பட்டது.
அதன்படி யோனோ இயங்குதளத்தைப் (Yono platform) பயன்படுத்தி ‘எஸ்பிஐ இன்ஸ்டா சேமிப்பு வங்கிக் கணக்கு’ திறக்கலாம். ‘எஸ்பிஐ இன்ஸ்டா சேமிப்பு வங்கிக் கணக்கு’ முழுமையான காகிதமற்ற மற்றும் உடனடி டிஜிட்டல் சேமிப்புக் கணக்கு ஆகும். சேமிப்பு கணக்கு தொடங்க ரூ.1000 டெபாசிட் செய்ய வேண்டும்.

SBI இன்ஸ்டா சேமிப்பு வங்கிக் கணக்கைத் திறக்க, வாடிக்கையாளர்கள் YONO செயலியைப் பதிவிறக்கம் செய்து, பான் மற்றும் ஆதார் விவரங்களை உள்ளிட வேண்டும். அதன் பிறகு, நீங்கள் ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) பெறுவீர்கள்.

OTPயைச் சமர்ப்பித்து, பிற தொடர்புடைய விவரங்களை நிரப்பவும். செயல்முறை முடிந்ததும், கணக்கு வைத்திருப்பவர் தனது கணக்கை உடனடியாக செயல்படுத்தி உடனடியாக பரிவர்த்தனை செய்யத் தொடங்குவார். வாடிக்கையாளர்கள் ஒரு வருட காலத்திற்குள் தங்கள் அருகிலுள்ள SBI கிளைக்குச் சென்று முழு KYC அளிக்க வேண்டும்.

வங்கி தொடர்பான ஏதேனும் குறைகள் இருந்தாலும் ஆன்லைனில் எளிதாக தெரிவிக்கலாம். அவ்வாறு புகாரை பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில், https://crcf.sbi.co.in/ccf/ என்ற இணையதளத்தில் புகாரைப் பதிவு செய்யலாம். மேலும், கட்டணமில்லா எண்களான 1800 1234, 1800 2100, 1800 11 2211, 1800 425 3800 மற்றும் 080-26599990 ஆகியவற்றிலும் புகார் அளிக்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Have any complaint against sbi staff and services heres how you can lodge it

Exit mobile version