/tamil-ie/media/media_files/uploads/2022/03/pan-aadhaar-linking.png)
பான் கார்டுடன் ஆதார் எண்ணை மார்ச் 31 ஆம் தேதிக்குள் இணைக்காவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 234H இன் படி, வருமான வரித் துறைக்கு ஒருவர் தனது ஆதாரை விவரங்களை தெரிவிக்கத் தவறினால், ரூ1000 அபராதமாக செலுத்த வேண்டும். பான் மற்றும் ஆதாரை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2022 ஆகும்
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதற்கான கடைசி தேதி கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பருடன் நிறைவடைந்த நிலையில், நடப்பாண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
பல முறை கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதால், இனிமேல் காலக்கெடுவை நீட்டிக்க வாய்ப்பில்லை என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆதார் பான் கார்ட் இணைக்கும் ஈஸி வழி
நீங்கள் ஆதார் மற்றும் பான் கார்டில் ரெஜிஸ்டர் செய்துள்ள பதிவு எண்ணில் இருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பு எளிதாக இணைக்கலாம்.
மெசேஜ் அனுப்பும் பார்மட்: 'UIDPAN உங்கள் 12 இலக்க ஆதார் எண் > 10 இலக்க பான் எண்' டைப் செய்து அனுப்ப வேண்டும் ( For Example: UIDPAN 100023456789 XXYZ0123X)
குறிப்பு: இரண்டு ஆவணங்களிலும் உங்கள் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.